மன்னார் ஆயரை சந்தித்தார் சஜித்தின் துணைவி

வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வின் துணைவியார் இன்று மாலை  மன்னார்  ஆயர் இல்லத்திற்கு சென்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்தார்.

இவருடன் கொழும்பு மாநகர முதல்வர்  ரோசி சேனநாயக்கா ,கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட  குழுவினரும் சென்று  மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடினர்.   

குறித்த சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 





No comments

Powered by Blogger.