முறைகேட்டில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்

நகரசபை செயலரின் பதவி பொறிக்கப்பட்ட முத்திரையின் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டில் வவுனியா நகரசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு எதிராகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில்  நகரசபை தலைவர் தெரிவித்ததாவது,

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நகரசபை, றம்பைக்குளம் வட்டாரத்தின் உறுப்பினர் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வந்திருந்தது, அந்த முறைப்பாடு தொடர்பில் எந்த ஆதாரமும் 
எமக்குக் கிடைக்கவில்லை. 

இதேவளை போலியான ஆவணம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றது. 

குறித்த ஆவணத்தை நாம் சோதித்து பார்த்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. அதற்கமைய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளோம். 

தமிழரசு கட்சியின் உறுப்பினர் இவ்வாறான மோசடியான நடவடிக்கையில் ஈடுபட்டதை பொலிஸ் நிலையத்தில் ஒத்துக்கொண்டார். அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார். நகரசபையின் கௌரவத்தை அவர் அவமதித்தமைக்கு தலைவர் என்ற ரீதியில் வருத்தப்படுகின்றேன். 

இது சபையின் ஊழியர்கள் உறுப்பினர்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொறுப்புடன் செயல்பட வேண்டிய உறுப்பினரின் இச் செயற்பாடு மக்கள் மத்தியில் அவமரியாதையை ஏற்படுத்துகின்றது. 

இதேவளை இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் கடுமையான எச்சரிக்கையும், பொதுமனிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் மீது இனியும் ஒரு முறைப்பாடு வரும் பட்சத்தில் கடுமையான சட்டத்தினூடாக தண்டிக்கப்படுவார்-என்றார்.


No comments

Powered by Blogger.