காணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் ஓலங்கள்

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை ஆரம்பமாகி இடம் பெற்றுவருகிறது.

இதன்போது அவர்களது கூட்டம் இடம் பெறும் பகுதிக்கு சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களை வழிமறித்த பொலிஸார் கூட்டம் இடம் பெறும் இடத்திற்கு செல்ல விடாததன் காரணத்தினால் வீதியோரத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 985 நாட்களாக போராடிவரும் காணாமல்  ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பந்தா 2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு நீங்கள் உறுதியளித்தீர்கள். இப்போது  ஒன்றுபட்ட, ஒரு மித்த பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வு வேண்டும். என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள் ? நீங்கள் ஏன் தமிழர்களிடம் தொடர்ந்து பொய் சொல்னீர்கள்?

தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க நீங்கள் தமிழர்களை கேட்கவில்லை.  என்றால் நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியற்றவர்கள்.  சுமந்திரனே பாராளுமன்றத்தில் பௌத்தத்துக்கு முதலிடம் யாரை கேட்டு கொடுத்தாய்? சம்பந்தா இலங்கை ஒரு பௌத்த நாடு என்று மோடிக்கு சொல்வதற்கு தமிழர்கள் உங்களுக்கு அனுமதி தந்தார்களா?

போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


No comments

Powered by Blogger.