ஊழியரை மிரட்டிய மீராமிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை மீரா மிதுன் ,இவர் ஓட்டல் ஊழியரை மிரட்டியதாக 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய நடிகை மீரா மிதுன், கடந்த 3-ந்தேதி எழும்பூரில் உள்ள ‘ரேடிகன் புளு’ ஓட்டலில் பேட்டி அளித்தார். அப்போது சென்னை பொலிசார் பற்றி மீரா மிதுன் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார்.பொலிசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு என் மீது பொய் வழக்குகளை போட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த பேட்டியின் போது ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மீராமிதுன் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் பற்றி மீரா மிதுன் பேட்டி அளித்த போது ஓட்டல் ஊழியரான அருண் என்பவர் தட்டிக் கேட்டதாகவும் அப்போது மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி எழும்பூர் பொலிசில் அருண் புகார் அளித்துள்ளார்.


இதையடுத்து மீரா மிதுன் மீது அவதூராக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய 2பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எழும்பூர்பொலிசில் ஏற்கனவே மீரா மிதுன் மீது இதேபோன்று மிரட்டல் வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.