பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

காலி - கராபிட்டிய பொலிஸ் தடுப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் முற்பகல் உயிரிழந்துள்ளார்.

34 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு நீதிமன்ற வைத்திய பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலைக்கு அருகில் கை விலங்குடன் இருந்த சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

காலி , போப்பே , பொத்தல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments

Powered by Blogger.