தமிழர்களுக்காய் கோத்தபாயவை ஆதரிக்கும் ரத்ன பிரிய

முல்லைத்தீவு பகுதி இராணுவ முகாமிலிருந்து மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஓய்வு பெற்ற கேர்ணல் ரத்ன பிரிய பந்து தனது ஆதரவை கோத்தபாய ராஜபக்சவிற்கு  வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்து கொண்டு உரையாற்றும்போதே இந்த விடயத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

சில மாதங்களுக்கு முன்பதாக வடக்கு, கிழக்கை சேர்ந்த இளைஞர்கள் என்னைச் சந்திக்க வந்தார்கள்.

அவர்கள் என்னிடம் கதைக்கும் போது, ஆறு வருடங்களாக எம்முடன் சேவையாற்றிய நீங்கள் எம்மை விட்டுச் செல்லும் போது உங்களை மீண்டும் எமது பகுதிக்கே தருமாறு கேட்டோம்.

நாங்கள் அவ்வாறு கேட்டது எம்மோடு யுத்தம் புரிந்த தெற்கை வதிவிடமாக கொண்ட ஒரு சிங்கள பௌத்த அதிகாரியை.

எமது அந்த கோரிக்கையைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெறுமனே வாக்குறுதிகளை மட்டும் தருகின்றார்கள். ஆனால் எதனையும் நிறைவேற்றித் தர மாட்டார்கள். அதனால் அவர்கள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை.

அதனால் நாம் கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம் எனக் குறிப்பிட்டனர்.

அதனால் தான் கட்டாயமாக கோத்தபாயவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.

அதற்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு பணியாற்றுவோம். விசேடமாக வடக்கு, கிழக்கு மக்களுடன் இணைந்து பணியாற்றுவேன்-என்றார்.

கடந்த வருடம் விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்ற நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.