நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரை நிறைவு

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 5 நாட்களே எஞ்சியுள்ளன.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நாளை மறுதினம் (13) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

அதன் பின்னர் எதிர்வரும் 16 திகதி வரை அமைதிக்காலம் கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அந்த காலப்பகுதியில் எந்தவித பிரச்சாரங்களையும் முன்னெடுக்க முடியாது எனவும் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறி எவராயினும் தேர்தல் பிரச்சாரங்களையோ அல்லது வேட்பாளர் ஒருவருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளையோ முன்னெடுக்க முடியாது எனவும் அவ்வாறு செயற்பட்டால் அது தண்டணைக்குரிய குற்றம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நவீன தொழினுட்பங்கள் மற்றும் அச்சுப் பதிபுகளை பயன்படுத்தி அல்லது வேறு வகையான உத்திகளையும் பயன்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுப்பது எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்தன.

அதற்கமைய அரசியல் கட்சிகள் உள்ளிட்டவகைகள் தற்போது தத்தமது இறுதிக்கட்ட பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.


No comments

Powered by Blogger.