செயற்குழு கூட்டம் ஆரம்பம்

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று காலை மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. 

குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரட்ணசிங்கம், சிறிநேசன், சி.யோகேஸ்வரன், சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராயா,
யாழ், மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை தலைவர்களான ஆர்னோல்ட், தி.சரவணபவன், வடமாகாண முன்னாள் அவைதலைவர் கே.சிவஞானம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கே.சயந்தன், குருகுலராயா ஆகியோர் வவுனியா வன்னி விருந்தினர் விடுதிக்கு வருகைதந்துள்ளனர்.

இதன்போது ஜனாதிபதி தேர்தல், கட்சியின் எதிர்கால செயற்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.