பாரபட்சமற்ற ஆட்சிஇலங்கையில் -ரணில்

பாரபட்சமற்ற ஆட்சி நிர்வாக நடைமுறை தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஆரம்பமான பொது நலவாய நீதி அமைச்சர்களது மாநாட்டின் அங்குரார்ப்பண விழாவின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். மக்களுக்கு மேலாண்மை அதிகாரம் கிடைக்கும் முறை அமுலில் உள்ளது.

பாராளுமன்றத்திற்கு அதிகாரம் கிடைப்பது மக்களின் மூலமாக இருந்தாலும், அதற்கு நீதிமன்றம் குரல் கொடுத்த சந்தர்ப்பம் உள்ளதெனவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் சுயாதீனமாக இயங்கிய விதத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
No comments

Powered by Blogger.