ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்டல் : ஜனாதிபதி

நாட்டுக்கே ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் நட்டம் இந்த ஆண்டு 89 பில்லியன் ரூபாவாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “விதுலி புராணய” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

நீர்வழங்கல், பெற்றோலியம் மற்றும் இலங்கை விமான சேவை ஆகிய நிறுவனங்களிலும் இடம்பெறும் முறைக்கேடுகள் நாட்டை பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி , அரசாங்கம் என்ற வகையில் தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது இந்த நிறுவனங்களிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.No comments

Powered by Blogger.