ரெலோவில் இருந்து விலகினார் சிவாஜி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்திருந்தார்  சிவாஜிலிங்கம்.

இந்நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி  அமைப்பு நடவடிக்கை எடுத்து  வருகின்றது.

இதையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். 

இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என். சிறிகீந்தாவுடம் கடிதமொன்றையும் நேற்று காலை நேரடியாக கையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.