ரத்துச் செய்யப்படும் விவசாயக் கடன்கள்

எங்களது ஆட்சியில் கீழ் அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச.

தம்புள்ளை- தம்புளுகம பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்பரையில், கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

விவசாயக் காப்புறுதி மற்றும் ஓய்வூதியத்தை எதிர்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளோம்.
  
மகிந்த ராஜபக்ச காலத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்த நிலையில், எங்களது ஆட்சியின் கீழ் அனைத்து விவசாயக் கடன்களும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் குறைந்த செலவில் கூடிய வருமானத்தை பெற்றுகொள்ளக் கூடிய வகையில் தொழிநுட்பத்தையும்  பயன்படுத்தவுள்ளோம் - என்றார்.


No comments

Powered by Blogger.