ஐனாதிபதி தேர்தல் யாருக்கு ? ஏன் ? எதற்காக ?

தமிழ்த் தேசிய வாழ்விலும். இயக்கத்தின்  ஐனாதிபதி தேர்தல் யாருக்கு ? ஏன் ? எதற்காக ? தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் . எனும் தொனிப் பொருளிலான மக்கள் மன்றம் யாழ் பிரதான வீதியிலுள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

மேற்படி மக்கள் மன்றம் தலைவர் வீ.எஸ்.சிவகரன் தலமையில் நடைபெற்ற இவ் மக்கள் மன்றத்தில் சிவில் சமூக பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிகள் உரையாற்றியிருந்தனர்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என். சிறிகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கே. சுகாஸ், ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க. அருந்தவபாலன், சிவில் சமூகத்தை சேர்ந்த மதகுரு சின்மியா மிசன் சுவாமிகள், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், கே.ரீ.கணேசலிங்கம், நவநீதன் உட்பட பொது மக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.