ஹோட்டல்மீது குண்டுத்தாக்குதல்

ஹோட்டல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் புத்தளத்தளம், ஆனமடுவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் குறித்த ஹோட்டல் மீது 7 முறை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கும்பல் தாக்குதல்கள் இடம்பெற்றதுடன், இரு முறை தீ வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஆதாரங்கள் இல்லாத வகையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஹோட்டலை சுற்றி பெற்ரோல் ஊற்றப்பட்டு பின்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் மற்றும் இதற்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் சிசிடீவியில் பதிவாகியுள்ளன.

தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து,  வருகின்றனர்.


No comments

Powered by Blogger.