மாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் பல்கலைக்கழகம்

பரீட்சைக் காலங்களில்  மாணவர்களுக்கு ஏற்படும் பயம் மற்றம் மன அழுத்தத்தைப்  போக்க அவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் வினோதமான முறையை நெதர்லாந்து பல்கலைக்கழகம் கையாள்கிறது.

பரீட்சை என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அதிலும் பொதுப் பரீட்சை என்றால் இன்னும் பரபரப்புடன் காணப்படுவார்கள்.

இதன்போது, ஏற்படும் மன அழுத்ததினால் பரீட்சையில் தோற்றுப் போகிறவர்களும் உண்டு. பரீட்சைகளில் ஏற்பட்ட தோல்வியினால் மனமுடைந்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டவர்களும் உண்டு.

இந்த நிலையில்,  பரீட்சையின்போது, மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க அவர்களை சவக்குழியில் படுக்கவைக்கும் வினோத முறையை நெதர்லாந்து பல்கலைக்கழகம் கையாள்கிறது.

நெதர்லாந்து நாட்டின் நிஜ்மேகன் நகரில் உள்ள ராட் பௌடு பல்கலைகழகமே இந்த முறையைக் கையாள்கிறது. அரைமணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை சவக்குழியில் மாணவர்கள் படுக்க வைக்கப்படுகிறார்கள்.  ‘வித்தியாசமாக இருங்கள்’ என்ற படுக்கையுடன் ஒரு போர்வை, யோகா பாய் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. 

இச் சம்பவம்  மாணவர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.

இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், ‘இந்த முறை மிகவும் பிரபலமாகியுள்ளது, சவக்குழியினுள் படுக்க நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் காத்திருப்போர் பட்டியல் அதிகமாகவுள்ளது. நிச்சயம் வேறு ஒரு நாள் அங்கு செல்வோம்’, என்றார்.

இத்திட்டத்தின் நிறுவனர் ஜான் ஹாக்கிங் இதுபற்றி கூறுகையில், ‘18, 19 வயதுகளில், வாழ்க்கையின் முடிவு, மரணம் போன்றவற்றை பற்றி மாணவர்களிடம் பேசுவது மிக கடினம், ஆனால் இந்த சவக்குழியில் படுப்பது, இந்த பூமியில் நமது வாழ்நாள் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்’ என்றார்.

கல்லூரி வளாகத்தில் ‘மரிப்பாய் ஒரு நாள் நினைவிருக்கட்டும்’ என எழுதப்பட்ட பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.


No comments

Powered by Blogger.