மக்களின் மனங்களை புரிந்தவராக இருக்க வேண்டும்

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறுவது  இந்த நாட்டின் தலைவரை அதாவது இன்னும் எதிர்வரும் ஜந்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டையும் எங்களையும் முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.

அவர் அனுபவமும் திறமையும் மக்களின் மனங்களை புரிந்தவராகவும் ஊழலற்றவராகவும் இருக்க வேண்டும் அப்படியானால் அதற்கு பொறுத்தமானவர் அமைச்சர் சஜித் பிரேமதாச என்பதை இன்று இந்த நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்.

எனவே அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. என வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று  இன்று தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்டிருந்தது. இந்த கூட்டத்தில் பெருந்திரளான பொது மக்களும்  கலந்து கொண்டனர்.


தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

அன்று நாங்கள் வாக்களித்த ஜனாதிபதி எங்களுக்கு ஒத்தழைப்பு வழங்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.ஆனால் எங்களை மறக்காமல் எங்களுக்கு தேவையான வேலைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றிக் கொடுத்தார்.

இந்த மலையக மக்கள் உங்களுக்காக வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள் எனவே அவர்களுடைய வாக்கை பெற்றுக் கொண்டு வெற்றி பெற்ற பின்பு அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது.

உங்களுடைய தந்தையார் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எப்படி எங்களுடைய மக்களின் மனங்களில் நிலையான ஒரு இடத்தை பிடித்திருக்கின்றாரோ ? அதே போன்ற ஒரு இடத்தை நீங்கள் இந்த மக்களுடைய மனங்களில் பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக எங்களுடைய மக்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற ஏனையவர்களை விட இந்த மக்களின் வாக்குகளை கேட்கின்ற உரிமை உங்களுக்கு இருக்கின்றது. அதற்கு காரணம் உங்களுடைய தந்தையார் என்பதை மறந்துவிடமுடியாது. எனவே உங்களுடைய வெற்றியானது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது.


No comments

Powered by Blogger.