யாழில் சமாதானப் புறாவை பறக்கவிட்ட வேட்பாளர்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த சஐித் பிரேமதாசா யாழ் சங்கிலியன் பூங்காவில் கல்வி இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகெஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இக் கூட்டத்தின் போது விஐயகலாவின் ஏற்பாட்டில் சமாதானப் புறாவாக வெள்ளைப் புறாவொன்றையும் அமைச்சர்கள் ஆதரவாளர்களுடன் இணைந்து பறக்கவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர்களான சரத் பொன்சேகா, ரிஷாட் பதியூதீன் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உட்பட கட்சிப் பிரமுகர்களும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.