கோர விபத்து சைக்கிள் சாரதிகள் உயிரிழப்பு

நாட்டின் சில பிரதேசங்களில் ​இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் 3பேர் உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை, கல்முனை வீதியின் உதயபுர பிரதேசத்தில் லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர் காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாபிடிகம, மல்வானை வீதியின் மேல் மாபிடிகம பிரதேசத்தில் கெப் ரக வாகனமொன்றில் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 09 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த சிறுவர்கள் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரிதீகம,மடதியாவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.