நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த படகு

சூறாவளி காற்று வீசியதால் 100 ஆண்டுகளுக்கு முன் நயாகரா ஆற்றில் பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த படகு ஒன்று நீருக்கு வெளியே வந்துள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 1918 ஆம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஹார்ஸ்ஷூ அருவிக்கு அருகே சென்று கொண்டிருந்த இழுவைப் படகு பாறைகளுக்கு இடையே சிக்கியது. படகில் 2 இருவர்  இருந்தனர்.

அவர்களுடன் அந்த படகையும் மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இறுதியில் அப் படகை அங்கேயே விட்டுவிட்டு கயிற்றின் உதவியால் இருவரையும் கரையேற்றினர். 

அதன் பின்னர் அப்படகு 150 அடி ஆழத்தில் மூழ்கியது. பிரமாண்ட நீர்வீழ்ச்சியான நயாகராவின் நீரோட்டத்துக்கு அசைந்து கொடுக்காமல் கிட்டத்தட்ட 101 ஆண்டுகள்  படகு சிக்கியிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  வீசிய பலத்த சூறாவளி காற்றினால் பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த படகு நகர்ந்து, நீருக்கு வெளியே வந்தது. 

பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு இழுத்து செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே 101 ஆண்டுகளுக்குப் பின்னர்  நீருக்கு அடியிலிருந்து வெளியே வந்த படகைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


No comments

Powered by Blogger.