ஆக்‌ஷன் படம் வெளியீடு

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆக்‌ஷன்’ திரைப்படத்தின் வெளியீட்டு  திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில்  ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அயோக்யா படத்துக்கு பின்னர் விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகவுள்ளது. இது பல படங்களுக்குப் பின்னர்  விஷால் - சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் .

தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது. இந்தப் படம் இம் மாதம் வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நவம்பர் 15ம் திகதி வெளியாகும் என்று விஷால் அறிவித்திருக்கிறார்.




No comments

Powered by Blogger.