சஜித்தை விரும்பும் சிறுபான்மையினர்-இராதாகிருஸ்ணன்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களில் சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்ய கூடிய ஒருவர் சஜித் பிரேமதாச அவர்களே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொத்மலை மம்மிபுற பிரதேச மக்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் ´ஒன்றாய் முன்னோக்கி´ செல்வோம் தேர்தல் பிரசார நடவடிக்கை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாச அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். எதிரணியில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் வாக்கு கேட்பவர்கள் மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை கொடுத்தவர்கள்.

இந்த நாட்டில் பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய குறிப்பாக சிறுபான்மை மக்கள் ஏற்றுக் கொள்ள கூடிய சிறுபான்மை மக்களை பாதுகாக்க கூடிய ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்கு பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச இருக்கின்றார். ஆகவே அவருக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்து ஜனாதிபதியாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments

Powered by Blogger.