பெண்கள் கண்ணாடி அணியத் தடை

வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணியக்கூடாது என   நிறுவனங்கள் கூறியதையடுத்து ஜப்பான் நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

பொலிஸ்துறை முதலான அனைத்து அரசு துறைகளிலும் பெண்கள் முக்கிய பதவி வகித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் பெண்கள் அதிகளவில் நிறுவனங்களில் வேலைக்குச் செல்கின்றனர்.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் அலுவலக வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடிகள் அணிந்து வரக்கூடாது என ஜப்பான் நிறுவனங்கள் கடந்த வாரம் தடை விதித்தன. 

கண்ணாடி அணியும் பெண்கள் ஒரு நட்பற்ற பார்வை தன்மை உடையவர்களாகவும், அவர்களின் முகத்தோற்றத்தை குறைப்பதாகவும் மற்றும் அவர்கள் அதி புத்திசாலிகளாகத் தெரிவதாகவும் கூறி அலுவலகம் செல்லும் பெண்கள் கண்ணாடி அணிவதற்குத் தடை விதித்தது.

இதற்கு நாடு முழுவதும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆண்கள் மட்டும் கண்ணாடி அணியலாம் ஆனால் பெண்கள் அணிய தடையா? என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

பல்வேறு இடங்களில் பெண்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.


No comments

Powered by Blogger.