தூய்மையான ஆட்சி ஒன்று நாட்டிற்கு தேவை-சஜித்

பொதுமக்களுக்கு உணரும் வகையில், மக்கள் சேவையை முன்னெடுக்கும் தூய்மையான ஆட்சி ஒன்று நாட்டிற்கு தேவை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளது.

நீர்க்கொழும்பில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

16 ஆம் திகதி வெற்றியின் பின்னர் கம்பஹா பொது வைத்தியசாலை பிரதான வைத்தியசாலையாக மாற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பொதுமக்கள் சார்பாக, வௌிப்படையான, சேறு பூசிக்கொள்ளாத, இலஞ்சம் பெறாத, தூய்மையான ஆட்சியொன்று, சிறந்த தீர்மானங்களை மெற்கொள்ளும் ஆட்சியொன்று, பொதுமக்களுக்கு உணரும் வகையான ஆட்சியொன்று தேவையாக உள்ளது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.