மக்களின் எதிர்காலமே முக்கியம்

கட்சியை விட மக்களின் எதிர்காலமே முக்கியம், என்பதை தான் அறிந்து கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார் இலங்கை சுதந்திரக் கட்சி ஹொரவப்பொத்தானை பிரதேச சபையின் உறுப்பினர் தில்ஸான் 

விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

ஒருவர் விரும்பியதை, மற்றவர் வெறுப்பதும், முரண்பட்டு நிற்பதும், மனிதன் வாழும் வரை இருக்கும் இது இயற்கையின் உலகப் பொது நியதி. இது தவிர்க்க முடியாத ஒரு விடயம்.

இருந்த போதிலும் எதையும் அறிவைக் கொண்டு அலசிட வேண்டும் அதுவே அறிவுள்ள மனிதனுக்கு அழகு.

பொதுவாக நாம் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு சிக்கி சிதைந்து தனிவழி போவது எதிர்கால இளம் சமூகத்தினருக்கு தவறான பாதையை அமைத்துக் கொடுக்கிறோம் என்பதுதான் உண்மை.

ஆரோக்கியமான தீர்வுகளை நிராகரிப்பதும் முரண்பட்டு விலகி நிற்பதும், தொடர்புகளை துண்டித்துப்பதும் பொய் அறிக்கை வெளியிடுவதும், மூன்றாம் தரப்பினருக்கு காட்டிகொடுப்பதும், அத்தகையவர்களை ஏவி விடுவதும் சிறந்த பண்பல்ல இவ்வாறான போக்கு சமூகத்தை படு குழியில் தள்ளி விட்டும்.

நீண்டகால ஏமாற்றங்களில் சாதாரண மக்கள் எல்லா கட்சி, அரசியல்வாதிகளையும் விட்டு விலகிச்செல்லவும், சமூக அமைப்புகள் மீதான நம்பிக்கையை இழந்து அவற்றிற்கு கட்டுபடாமல் தனி தீர்மானங்களை எடுக்கும் நிலமை இன்று உருவாகியுள்ளது. இது தொடந்து செல்ல விடாமல் சமூக சிந்தனையாளர்கள் விழித்து கொள்ள வேண்டும்.

இந்தத் தருணத்தில்தான் நாம் சிந்திக்க வேண்டும் நனி மனித இலாபகார சிந்தனையும், நியாயமே இல்லாத பக்கச்சார்பான எண்ணமும், மேலாதிக்க கர்வமும் கொண்ட செயற்பாடுகள் அனைத்தையும் துடைத்து எறிந்துவிட்டு ஒற்றுமையாக ஒரே பாதையில் பயணிப்பதே சிறந்தது -என்றார்.


No comments

Powered by Blogger.