வைரலாகும் விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷின் செல்பி

'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்து வரும் 'க/பெ ரணசிங்கம்'. இந்த படத்தை விருமாண்டி இயக்குகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தபட படத்தை தயாரிக்கிறது.


இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்', 'தர்மதுரை' படங்களில் விஜய்  சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

தற்போது நான்காவது முறையாக இருவரும் இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இருக்கும் செல்பியை பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் ரீட்விட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.No comments

Powered by Blogger.