அத்துமீறி மீன்பிடித்த இந்தியர்கள் கைது

இலங்கைக்கு உரித்தான வட கடற்ப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை நேற்றைய தினம் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.இதன்போது அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடிப்படகும் இலங்கை கடற்படைனர் கைப்பற்றியுள்ளனர்.

நெடுந்தீவின் வடமேற்குக் கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இலங்கை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்த்த  மீனவர்களை வடக்குக்கடற்படை கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர். 

இதன்படி, மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் இலங்கை கடற்படைக் கப்பல் உத்தரவிற்க்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீனவர்கள் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.


No comments

Powered by Blogger.