விஜய் படம் திடீர் சிக்கல்

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’படப்பிடிப்புக்கு  காற்றுமாசு பெரும் தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் நடைபெற்று வரும்  படப்பிடிப்பை  40 நாள்கள் தொடர்ச்சியாக  நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் இவ்வாறு தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக படப்பிடிப்பு நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், குறைவான நேரம் மட்டுமே விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இப்படத்தில், நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்



No comments

Powered by Blogger.