பயங்கரவாதத் தாக்குதல் ; நால்வருக்குத் தூக்கு


பயங்கரவாதத்  தாக்குதல் தொடர்பாக  நால்வருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாம் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த இம்ரான் ஷாசத், முகம்மது பாரூக், பீகாரை சேர்ந்த சபாவுதீன், ராம்பூரை சேர்ந்த முகம்மது ஷெரீப், மொரதாபாத்தை சேர்ந்த ஜாங் பகதூர், மும்பையை சேர்ந்த பகிம் அன்சாரி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு விசாரணை ராம்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது. 6 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி உறுதி செய்தார்.

இதனையடுத்து இம்ரான் ஷாசத், முகம்மது பாரூக், சபாவுதீன், முகம்மது ஷெரீப் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி சஞ்சய் குமார் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

ஜாங் பகதூருக்கு ஆயுள் தண்டனையும், பகிம் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் இதன்போது விதிக்கப்பட்டது.


No comments

Powered by Blogger.