இருவரும் ஒருவர் தான் - சந்திரசேகரன்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், அனுர குமார் திசாநாயக்க ஐனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் , தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஊடக சந்திப்பு, யாழ் பாடி விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது. 

மக்கள் சக்தி அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் ஐனாதிபதி தேர்தல் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில் ,

குறிப்பாக பிரதான வேட்பாளர்களான கோத்தபாய ராஐபக்ச மற்றும் சஜித் பிரேமதாசா ஆகிய இருவரும் ஒருவர் தான் என்றும் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றும் தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த நாட்டை தாமே ஆளப் போவதாக கூறுகின்ற இவர்கள், இருவரும் கா.பொ.த.சா தரம் கூட சித்தியடையாதவர்கள். சாதாரண தொழிலாழிக்கே ஒரு வேலையில் கல்வி தரம் பார்க்கின்ற நிலையில் இத்தனை இலட்சம் மக்களுக்கு தலைவர்களாகின்றவர்களுக்கு கல்வி தரம் தேவையில்லையா ? என்றும் கேள்வி எழுப்பினார்.

அத்தோடும் இருவருமே இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை  எடுக்காதவர்களாகவே இருக்கின்றனர். மேலும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பிலும் அக்கறை செலுத்தவில்லை.

 இவ்வாறான நிலையில் கூட்டமைப்பு எதுவித நிபந்தனைகளும் இல்லாமல் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக சொல்லியுள்ளனர்.
கோத்தபாய என்றால் பயம் . கோத்தா வந்தால் வெள்ளைவான் வரும் என்று கூறிக்கொண்டு கோத்தாவுடன் கொள்கைகளை ஒத்த அதே சஜித் பிரேமதாசாவை எப்படி ஆதரிக்க முடியும்? 

இவ்வாறு பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதே போல மக்கள் சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும் பல விடயங்களை இச் சந்திப்பில் தெரிவுத்துள்ளனர்.


No comments

Powered by Blogger.