யாழ்.பல்கலை மாணவன் தற்கொலை

யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒருவர்  தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்தச் சம்பவம் யாழ்.போதனா மருத்துவமனை முன்பதாக இருக்கும் ஆண்கள் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

மருத்துவத்துறையின் இறுதி வருட மாணவனாகிய கியூமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனின் நண்பர்கள் விடுமுறையில் வீட்டிற்கு சென்ற நிலையில் கதவை  உட்பக்கத்தால் பூட்டி விட்டுத் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாள்கள் கடந்து விட்ட நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் அருகிருக்கும் அறை நண்பர்கள் அறைக் கதவை திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் உடலை கண்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸாரின் உதவியுடன் உடல்  மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.