இளைஞர்கள்மீது தாக்குதல் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அம்பாறை-கல்முனையில் இளைஞர்கள் சிலர்  தாக்கப்பட்டதனைக் கண்டித்து  கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேசத்தின் சிவில் அமைப்புகள் இணைந்து, நேற்றையதினம் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் முன்னால்  ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து  சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. 

இக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகை தரும்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த சிலர் சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு முன்பாக வைத்து இளைஞர்கள் சிலரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையிலேயே, இளைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சிவில் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது இங்கு கூடியிருந்த இளைஞர்கள் நல்லாட்சி அரசின் நீதியான நியாயமான தேர்தல் சாய்ந்தமருதில் நடத்தப்பட வேண்டும். இளைஞர்களை தாக்கிய குண்டர் குழுவை கைது செய்ய வேண்டும். 

தேர்தல் பிரசாரங்களின் போது அரச சொத்துக்களை பயன்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




No comments

Powered by Blogger.