‘நிசப்தம்’ படத்தின் டீசர் வெளியீடு

ஹேமந்த் மாதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து வரும் ‘ நிசப்தம் ’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ பாகமதி ’, ‘ சைரா ’ திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘நிசப்தம்’ திரைப்படத்தில், வாய் பேசாத காது கேளாத ஆர்ட்டிஸ்ட் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ளார்.

இந்நிலையில், சஸ்பன்ஸ் ஸ்பை த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வரும் நாளை  வெளியாகும். என அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘இரண்டு’ படத்திற்கு பிறகு ‘ நிசப்தம் ’ படத்தில் மீண்டும் மாதவனுடன் அனுஷ்கா இணைந்து நடித்துள்ளார். 

கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.


No comments

Powered by Blogger.