கடற்படைக்கப்பல்கள் குவிப்பு. மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு  அருகே மீன்பிடித்துக் கொன்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்திய சம்பவம் மீனவர்களிடையே பெரும் பதட்டதை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுமார் 250 க்கும் மேற்ப்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள்   மீன்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

கச்சத்தீவுபப்குதியில் 20 க்கும் மேற்ப்பட்ட இலங்கை ரோந்துக்கப்பல்கள் இரவு பகலாக ரோந்துபணியில் ஈடுபட்டதால் மீனவர்கள் அச்சத்தால் மீன்பிடிக்க முடியாமல் அவதியுற்றனர்.

இவர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கும்  கச்சத்தீவுக்கும் இடையே  மீன்பிடித்துக் விட்டு கரை திரும்பும்  போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி படகை நிறுத்தச் சொல்லி 100 க்கும் மேற்ப்பட்ட படகுகளிலிருந்த  பல லட்சம் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.

மேலும் இப்பகுதியில் நின்றால் கைது செய்வோம். என எச்சரிக்கை விடுத்து விரட்டியடித்தனர். இதனால் படகுகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பெருத்த நஷ்டம் ஏற்பட்டு கரை திரும்பியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

குமாரிக்ககடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஏழு தினங்களாக மீன் பிடிக்க செல்லவில்லை.

வெள்ளிகிழமை இரவு மீன் வளத்துறை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என அறிவித்தது. ஆனால் கால தாமதமாக அறிவித்ததால்  மீன்பிடிக்க செல்ல மீன் பிடி தொழிலார்கள் இல்லாமல் குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றது.

இன்று இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவத்தால் வரும் நாட்களில் மீன்பிடி தொழிலாலர்கள் இல்லாமல் பாரம்பரிய தொழிலான மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்ப்பட்டும்.

மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி நடுக்கடலில் பிரச்சினையில்லாமல் தழிழக மீனவர்கள் மீன்பிடிக்க நிரந்திர தீர்வு பெற்று தர வேண்டும். என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments

Powered by Blogger.