நேரத்தை வீணாக்கும் அரச சேவையை நிறுத்துவோம்

மக்களின் நேரத்தை வீண்விரயம் செய்யும் அரச சேவையினை நிறுத்தி விடுவதே எமது கொள்கையாகும் - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க. 

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே  அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திருப்தியுடன் கூடிய சேவையை நாங்கள் உருவாக்குவோம். அவ்வாறு உருவாக்கப்பட்டதன் பின்னர் எந்த ஒரு அரச நிறுவனத்திலாவது மக்களின் காலத்தை வீணடிப்பார்களாயின் அந்த அரச வேலை தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பின்னிற்க மாட்டோம்.

மக்களின் நேரத்தை வீண்விரயம் செய்யும் அரச சேவையினை நிறுத்தி விடுவதே எமது கொள்கையாகும்-என்றார்.


No comments

Powered by Blogger.