சினிமாவை கமல் மறக்கவில்லை - ரஜினிகாந்த்

அரசியலுக்கு வந்த பிறகும் தாய் வீடான சினிமாவை கமல் மறக்கமாட்டார். என்பது நிரூபணமாகியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,

" நேற்றும், இன்றும் கமலுக்கு மறக்க முடியாத நாட்கள்.   நேற்று கமல் தனது தந்தை சிலையை பரமக்குடியில் திறந்து வைத்தார். இன்று தன் கலையுலக தந்தை சிலையை இங்கு திறந்து வைத்துள்ளார்.

இயக்குநர் கே.பாலசந்தருக்கு மிக மிகப்பிடித்த குழந்தை கமல். படப்பிடிப்பு தளத்தில கமல் செய்யும் செயல்கள், பேச்சு, தூங்குவதை கூட பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார். 

அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்து நள்ளிரவு நேரத்தில் கமல் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்து பராட்டினேன். கமலின் ஹேராம் திரைப்படத்தை இதுவரை 30 முதல் 40 முறை பார்த்து உள்ளேன்.

ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது புதிதாக பார்ப்பது போன்றே இருக்கும் என கமலின் நடிப்பை பாராட்டினார்.


No comments

Powered by Blogger.