பயங்கரவாதி பாக்தாதியின் சகோதரி கைது

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில்  பாக்தாதி, பதுங்கியிருப்பதை அறிந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி அமெரிக்க சிறப்புப் படை சுற்றி வளைத்தது. 

தப்பிக்க வழி இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பாக்தாதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பாக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா (வயது-65) மற்றும் அவரது குடும்பத்தினரை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனைத்  துருக்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாகத் கூறப்படுகிறது.

வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணம் அஜாஸ் நகரில் கணவர் மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்த ராஸ்மியா நேற்று மாலை கைது  செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments

Powered by Blogger.