சாதனையாளர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பும்

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட விசுவமடு விஸ்வநாதர்  ஆரம்ப பாடசாலையின் புலமைபரிசில் கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் நேற்று   விசுவமடு மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இப் பாடசாலையின் அதிபர் யோ.மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லை வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராசாவும்   சிறப்பு விருந்தினர்களாக பாடசாலை பழைய மாணவியும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் வைத்திய கலாநிதியுமான திருமதி பிரசாத் ஜெயவதனி மற்றும் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.சுப்பிரமணியேஸ்வரன் ஆகியோரும் அயல்பாடசாலை அதிபர்கள் வங்கி ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதன்போது பாடசாலையில் இருந்து இந்த ஆண்டு தரம் 5 புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றி முல்லைத்தீவு மாவட்டத்தில் பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கும் வெற்றிக்கு காரணமாக இருந்த  அதிபர் ஆசிரியர்களுக்கும் கௌரவிப்பு  இடம்பெற்றது.

புலமைபரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த தந்தையினை இழந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஆறுபேருக்கு மிதிவண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.