தேர்தலைப் புறக்கணிக்க கோரி ஆர்ப்பாட்டம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் உடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று இடம் பெற்ற நிலையில் குறித்த  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

உள்ளக விசாரணையை நிராகரிக்கிறோம் , காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிராகரிக்கிறோம், காணாமல் ஆக்கப்படடோரை கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் , சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக இடம்பெறல் வேண்டும் , கலப்பு பொறிமுறை வெறும் கண்துடைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாதை தாங்கியவாறு போராடடம் இடம்பெற்றது

தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது போராட்ட இடத்தில் போராடிய நிலையில் வேறு ஒரு அணியினர்  சுமார் 50 பேர் வரையில் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெத்தனர். No comments

Powered by Blogger.