காணாமல் ஆக்கப்பட்ட மாணவர்கள் சுட்டுக் கொலை

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட   தமிழ் மாணவர்கள் ஐவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இத் தகவலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இம் மாணவர்கள் திருகோணமலை கடற்படை வதை முகாமில் வைத்து, எம்.பி. 5 ரக இயந்திர துப்பாக்கிகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  

இச் சம்பவம் குறித்த இறுதி முடிவை எட்டுவதற்காக மருத்துவ பகுப்பாய்வு மற்றும் இரசாயன ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதற்கான அனுமதியை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க வழங்கியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த சாட்சியங்கள் மற்றும் வாக்கு மூலங்களின் பிரகாரம் இக் கொலைகள், கன்சைட் வதை முகாமுக்கு பொறுப்பாகவிருந்த கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் இருந்த விசேட உளவுப் பிரிவொன்றினால் முன்னெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments

Powered by Blogger.