புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவில் வளைவு திறந்துவைப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  ஸ்ரீகந்தசுவாமி கோவிலுக்கு செல்லும் வீதியின் வளைவு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. 

ஆலய நிர்வாகத்தினது ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்த நிகழ்வில்  புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய மாணவர்களின் பான்ட்வாத்திய இசையுடன் விருந்தினர்கள்  அழைத்துவரப்பட்டு கந்தசுவாமி கோவில் வளைவில் உள்ள பிள்ளையார், முருகன், சிவன் சிலைகளுக்கு பூசகரால் அபிசேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டு வளைவு திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜயந் மற்றும் கல்விச் சமூகத்தினர், ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.