ஒப்பந்தத்தை எதிர்த்து உடுதும்பர தேரர் உண்ணாவிரதம்

இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு  இடையில் கையெழுத்திட முன்மொழியப்பட்ட மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் ஒப்பந்தத்தை எதிர்த்து உடுதும்பர காஷ்யப்ப தேரர்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில்  உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அறிக்கை கொடுக்கும் வரை  உண்ணாவிரதத்தைக் கைவிடமாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிகாவுடனான குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதியிடமிருந்து, பிரதமருக்கு உத்தரவிடப்படும் வரை உண்ணாவிரதத்தை தொடரவுள்ளதாக குறித்த பிக்கு தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.