புதிய ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

இந்தியாவில் இருந்து 3 ரயில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

10 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருக்கும் நிலையில் தற்போது வரையில் 8 ரயில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவற்றை விரைவில் சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரயில் இயந்திரம் பதுளைக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.