யாழ் வீராங்கனை தெற்காசியப் போட்டிக்கு தெரிவு

தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாமரி வர்ணகுலசூரிய தலைமையிலான இலங்கை பெண்கள் பளுதூக்குதல் அணியிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனை ஆஷிகா இடம்பிடித்துள்ளார்.

13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி நேபாளத்தின் காட்மண்டுவில்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.