கொழும்பு வரும் சஹாரனின் மனைவி ; விமல் எதிர்வு கூறல்

பயங்கரவாதி சஹரானின் மனைவிக்கு பணம் கொடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவுள்ளனர் அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் ராஜித சேனாரத்ன.

இத் தகவலை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

பொலநறுவ பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய சஹரான் ஹாஷிமின் மனைவியை  அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் கொழும்புக்கு அழைத்து வரவுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்சவும் சஹரான் ஹாஷிமும்   நான்கு தடவைக்கும் அதிகமாக சந்தித்துள்ளனர் எனபதை சஹரானின் மனைவியைக் கொண்டு சொல்ல வைக்கவுள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி அதிலே சஹரானின் மனைவியை பேச வைக்கவுள்ளனர்.

இதற்காக சஹரானின் மனைவிக்கு அவர்கள் பணமும் கொடுக்கவுள்ளனர். இதற்கான சகல ஏற்பாடுகளையும் இரு அமைச்சர்களும் செய்து முடித்துள்ளனர் - என்றார்.


No comments

Powered by Blogger.