இரட்டை வேடங்களில் தனுஷ்

தனுஷ்,  இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘D40’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லண்டனில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. 

அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய நடிகர் தனுஷ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார். 

‘பட்டாஸ்’ திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுசுக்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்துள்ளனர். 

தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், இப்படம் 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.