கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கா பிரஜை இல்லை

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கப் பிரஜை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கும் ஆவணத்துடன், நாமல் ராஜபக்ச  டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தமது டுவிட்டர் தளத்தில் கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் பதிவிட்டிருந்தார்.

நந்தசேன கோத்தபாய ராஜபக்சவின் பெயர் அமெரிக்காவின் பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் இதுவரை உள்ளடக்கப்படவில்லை. என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


No comments

Powered by Blogger.