ஹெரோயினுடன் கைதானவருக்கு மரண தண்டனை

200 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிரான வழக்கு மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

அதன்படி, குறித்த வழக்கின் பிரதிவாதியை குற்றவாளியாக அறிவித்த மேல் நீதிமன்றம்  அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அம்பலாங்கொடை பெரகம வீதி பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.No comments

Powered by Blogger.