வெளிநாட்டு தூதர்களுக்கு சந்திக்க விரும்பவில்லை – சரத்

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு தூதர்கள் யாரும் அவர்களை சந்திக்க விரும்பவில்லையென  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், 

வெள்ளைவான் கலாச்சாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே ஒழிக்கப்பட்டது. 

2015 வெற்றிக்காக நீங்கள் அளித்த ஆதரவைப் போன்றே எதிர்  வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாசவையும் ஆதரிக்க வேண்டும்.

வெள்ளைவான் கலாச்சாரம் எமது ஆட்சிக்காலத்திலேயே ஒழிக்கப்பட்டது. வெளிநாட்டு தூதர்கள் யாரும் . மஹிந்தவின் ஆட்சி காலத்தில்  அவர்களை சந்திக்கவோ சமாதானத்தையோ    விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம்.

தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரம் கோத்தபாய ராஜபக்சவின் விருப்பத்திற்காக மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் ஒரு யுத்தத்தை மக்கள் விரும்பவில்லை.

மீண்டும் ஒரு யுத்தம் இந்த நாட்டில் இடம்பெற விடமாட்டோம். சஹரான்கள் உருவாகவும் விடமாட்டோம். அவர்களை ஆதரிப்போரையும் கண்காணித்து நல்வழிக்கு கொண்டு வருவோம்.

இதேவேளை, நானே கல்முனைக்கு வந்து சிறப்பான தீர்விற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பேன். சஜித் பிரேமதாசவை விசுவாசியுங்கள் என தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.