மாவீரர் தினத்தைத் தடுப்பது மாபெரும் உரிமை மீறல் -சஜித்

ஆயுதப் போரில் உயிரிழந்த  உறவுகளை அமைதியான முறையில் நினைவுகூர்வதற்கு தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. அதைத் தடுப்பது மாபெரும் மனித உரிமை மீறல் - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச. 

தமிழர்களின் உறவுகளைப் புலிகள் என்றோ அவர்களது உறவினர்கள் என்றோ பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாவீரர் நாள் தற்போது தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும் அதற்கு அனுமதி வழங்குவீர்களா? என்று சர்வதேச ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.