ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

கள்கிஸ்ஸ - தெலவள பகுதியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட வந்த பெண்ணொருவரை காவல்துறையின் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த பெண் கைதுசெய்யபட்டுள்ளார்.

44 வயதுடைய பெண்ணை கள்கிஸ்ஸ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.